பிரதமர் நரேந்திர மோடி, 'பேஸ்புக்', 'டுவிட்டர்' போன்ற சமூக வலைத் தளங்களை கையாளுவதில் வல்லவர். முக்கிய நிகழ்வுகள், நாட்டு நடப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தினந் தோறும் அவர் தனது தளத்தில் பதிவேற்றி வருகிறார். இந்த சமூக வலைத் தளங்களில் அவரை ஏராளமானோர் பின்தொடர் கிறார்கள்.

இந்நிலையில் சமூக வலைத் தளங்களில் செய்திகளை பகிர்தல், பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு, இணைய தளத்தில் செல்வாக்கு மிகுந்த 30 பேரின் பட்டியலை அமெரிக்க பத்திரிகையான 'டைம்' வெளியிட்டு உள்ளது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் பிரதமர் நரேந்திரமோடியும் இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், பாப்பாடகிகள் டெய்லர் சுவிப்ட், பியான்ஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

சமூக வலைத் தளங்களில் மோடியை 3 கோடியே 80 லட்சம் பேர் பின் தொடர்வதாக கூறியுள்ள டைம் பத்திரிகை, இது ஒபாமாவை தவிர, வேறெந்த தலைவரையும்விட அதிகமானது என்றும் கூறியுள்ளது.

Leave a Reply