தமிழக – இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தையை வரும் 11ம் தேதி நடத்த இயலாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்த வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டதேதியில் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவை தெரிவிக்கும்படி கேட்டு இருந்தது. இதற்கு நேற்று பதில் கடிதம் அனுப்பியுள்ள தமிழக தலைமை செயலாளர் ஞான தேசிகன் வரும் 11-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்த இயலாது என்று கூறியுள்ளார்.

வரும் 15-ம் தேதிக்கு பின்னர் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தமிழக அரசுக்கு மீனவர் பிரச்சனையில் தனிப்பட்ட அக்கறை தேவை . மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தனி கவனத்துடன் செயல்படுகிறது மீனவர்களின் படகை மீட்பது உள்ளிட்ட தகுந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply