மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை பாஜக தலைவர் அமித்ஷா வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.

இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

பாஜக தலைவர் அமித்ஷா, ஒரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை காலை நாகபுரிக்கு வந்தார். அவரை, முதல்வர் தேவேந்திர பட்ன வீஸýம், உள்ளூர் பாஜக தலைவர்களும் வரவேற்றனர்.

பின்பு, ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்ற அமித்ஷா, அங்கு அதன் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அஜய் சஞ்சேத்தியும் உடனிருந்தார்.

Leave a Reply