மத்திய உணவு, பொது விநியோகத் துறை இணை அமைச்சர் தான்வே தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா பாஜக தலைவரானதால் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தான்வே கூறினார்.

மகாராஷ்டிரா சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் மாநில தலைவராக இருந்த தேவேந்திர பட்னா விஸ் முதல்வரானார்.

இதனைத் தொடர்ந்து அம்மாநில பா.ஜனதா தலைவராக மத்திய இணை அமைச்சர் தான்வே நியமிக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்த வரையில் ஒருவருக்கு ஒருபதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தான்வே தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தான்வே தமது பதவியை ராஜினாமா செய்தார்.

Leave a Reply