இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்க மாட்டோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இலங்கை பிரதமரின் பேச்சு திட்டமிட்டு பெரிது படுத்தப்படுகிறது

பிரதமர் மோடியின் பயணம்குறித்து ஆலோசனை நடத்த இலங்கையில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , 13-ம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ள பிரதமர் மோடி ஆகிய இருவரும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு முடிவுகாண்பார்கள்.

எனவே, இடைப்பட்ட பேச்சுக்கு முக்கியத்துவம் தராமல் , பேச்சுவார்த்தைக்கு பிறகு வரும் முடிவுக்கு முக்கியத்துவம் தருவோம்.'' என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply