ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத தலைவரை விடுதலைசெய்ய உத்தரவிட்டது குறித்து அம்மாநில அரசு அறிக்கை அளிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபியை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை செயலாளர் எல்சி கோயல், பிரிவினை வாதத் தலைவர் மஸாரத் அஸ்லாம் விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது .

, மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அம்மாநில பா.ஜனதாவினர் மத்திய தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய ஜம்முகாஷ்மீர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலும் இதேகருத்தை வலியுறுத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு மசரத்ஆலம் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இந்தவிவகாரத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

2010ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த வன்முறைக்கு முக்கியகாரணமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட பிரிவினைவாத தலைவர் மசரத்ஆலமை விடுதலைசெய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டது. நாட்டுக்கு எதிராக போரை தூண்டுதல் உள்ளிட்ட 15 வழக்குகள் ஆலம் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply