ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத தலைவரை விடுதலைசெய்ய உத்தரவிட்டது குறித்து அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில பாஜக தலைவரும் எம்பியுமான ஜுகல் கிஷோர் சர்மா கூறும்போது, "இந்த சர்ச்சைகுரிய விவகாரம் பற்றி பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம்நடத்தி விவாதித்து, பிடிபி ஒருதலை பட்சமாக முடிவுசெய்து பிரிவினைவாத தலைவரை விடுவிக்க எடுத்தமுடிவு பற்றி விவாதிப்போம். இந்த முடிவை எடுக்கும் முன்பாக பாஜக.,வுடன் ஆலோசிக்கபடவில்லை"

"பிரிவினைவா தலைவரை விடுவிக்கும் முடிவுக்கு பாஜக.,வின் ஒப்புதல் பெறவில்லை. மஸ்ரத் ஆலமை விடுதலை செய்ய போவதற்கு முன் எங்களிடம் கேட்டிருந்தால் அதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டோம். இப்போதும் நாங்கள் அந்தமுடிவுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம்.

இத்தகைய தலைவர்களை விடுதலை செய்யக் கூடாது. இந்தியா எதிர்ப்பு நஞ்சை கக்குபவர்கள் அவர்கள். அத்தகையோரை நிபந்தனை ஏதுமின்றி வெளியில்விட்டால் பிரிவினைவாத முழக்கங்களை மேற்கொள்வார்கள்.

இந்தபிரச்சினை கூட்டணி அரசை நடத்துவதற்கான அடிப்படையாக உள்ள குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் இடம்பெறவில்லை. எனவே இது குறித்து ஆலோசனை நடத்தி தெளிவான முடிவு எடுப்போம். யாரையும் சார்ந்து பா.ஜ.க இல்லை. மாநில மக்களின் நலன், மேம்பாட்டை கருத்தில் கொண்டு தான் பிடிபி கட்சியுடன் பாஜக கைகோத்தது. ஆட்சி சரி இல்லை என்றால் தெளிவான முடிவை அறிவிப்போம்" என்றார் கிஷோர் சர்மா

Leave a Reply