பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் மீதான சில வழக்குகளை தேசியபுலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றுவது குறித்து மத்திய அரசு பரிசிலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

மஸரத் ஆலம் மீது நிலுவையில் உள்ள 27 குற்றவழக்குகளில், 8 வழக்குகள் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தவழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப் படலாம்.

மேற்குறிப்பிட்ட அனைத்து வழக்குகளும், விசாரணை நிலையிலேயே உள்ளன. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பிரிவு 6(5)-படி, ஒருவழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவுசெய்தால், அதை அந்த அமைப்புக்கு மாற்றமுடியும். ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், மஸரத் ஆலம் ஜாமீனில் விடுவிக்க மாநில அரசு உத்தரவிட்டதாக, மாநில உள்துறை செயலர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். உண்மையில், அவ்வாறு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

மஸரத் ஆலம் மீது பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதியவழக்கு பதிவதில்லை என்று மாநில நிர்வாகம் எந்த அடிப்படையில் முடிவுசெய்தது? இது தொடர்பாக, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், இது வரை நிகழ்ந்த மாற்றங்கள் என்ன என்பது குறித்து மாநில உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்க பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply