2 நாள் பயணமாக இலங்கைசெல்லும் பிரதமர் நரேந்திர மோதி 14-ம் தேதி யாழ் பாணம் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். 13-ம் தேதி அதிகாலை கொழும்புசெல்லும் அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று இலங்கை அதிபர் சிறிசேனவை சந்தித்து பேசும் மோதி இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்த ஒப்பந்தங்களில்

கையெழுத்திடுகிறார். பின்னர் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை யாற்றுகிறார். அடுத்த நாள் அனுராதா புரம் செல்லும் மோடி மஹா பூதி தியான பீடத்தில் பிரார்த்தனை செய்கிறார்.

அங்கிருந்து தலைமன்னார், செல்லும் அவர் இந்தியாசார்பில் நிர்மாணிக்கப் பட்டுள்ள ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதேபோல் யாழ் பாணம் செல்லும் பிரதமர் மோதி இந்தியா சார்பில் கட்டப்பட்ட வீடுகளையும் மோடி பயணாளிகளுக்கு வழங்க உள்ளதாக பேசிய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இலங்கை பயணத்திற்கு பின்னர் இந்திய – இலங்கை மீனவர்களிடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் கூறினார்.

Leave a Reply