மேற்கு வங்கத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும். என, அம்மாநில முதல்வர் மம்தாவிடம், பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்துள்ளார்.

நேற்று, தங்கள் கட்சி எம்பி.,க்களுடன் பிரதமரை சந்தித்த மம்தா, மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதி உதவி அளிக்கும்படி வலியுறுத்தினார். பிரதமருடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் இதற்கு முன் ஆட்சி நடத்திய இடதுசாரியினர், ஏராளமான கடனை வாங்கி, மாநிலத்தை நிதிநெருக்கடியில் தள்ளிவிட்டனர். ரிசர்வ் வங்கியிடம் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இது போன்ற கடன்களுக் கெல்லாம், வட்டிசெலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கடனை தள்ளுபடிசெய்ய வேண்டும் என்றும், மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், பிரதமரிடம் வலியுறுத்தினோம் என்றார்

Leave a Reply