பாஜக.,வின் தமிழக பிரிவின் ஒருங்கிணைப் பாளராக மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியை வலுப் படுத்தும் நோக்கில், பா.ஜ ஆட்சி நடைபெறாத தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, உள்ளிட்ட 7 மாநிலங்களில் 7 மத்திய அமைச்சர்களை, ஒருங்கிணைப் பாளர்களாக தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார்.

அதன்படி, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஒருங்கிணைப்பாளராக பியூஷ்கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளமாநில ஒருங்கிணைப்பாளராக ராஜிவ்பிரதாப் ரூடியும், மேற்குவங்க ஒருங்கிணைப்பாளராக நிர்மலா சீதாராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்திற்கு தர்மேந்திர பிரதானும், ஒடிஷா மாநிலத்திற்கு மகேஷ்ஷர்மாவும், தெலங்கானா மாநிலத்திற்கு ஹன்ஸ் ராஜ் அஹீர்-ம் ஒருங்கிணைப் பாளர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்குதேசம் கட்சியுடன் இணைந்து பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்துள்ள ஆந்திரப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜேபிநட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply