முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி கவிழ்ந்த போது, எப்படியாவது பதவியை பிடிக்கவேண்டும் என எண்ணி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலரை விலைக்குவாங்க முயற்சித்தது குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆடியோ டேப் ஆதாரம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆம் ஆத்மி தலைவர் பதவியிலிருந்து அஞ்சலி தமானியா ராஜினாமா செய்துள்ளார். இதனால் அக்கட்சியில் ஆம் ஆத்மிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்தமுறை நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை பிடிக்க முடியாததால் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை அமைத்தது. காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 49 நாட்களில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆட்சி கவிழ்ந்தது.

பின்னர், பாஜக. அங்கு ஆட்சியை பிடிப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் சிலரை விலைக்குவாங்க கெஜ்ரிவால் பேரம் நடத்தியதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகின. இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்து வந்தது .

பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி சட்ட சபை தேர்தலில் அமோகவெற்றி பெற்ற ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக பதவி ஏற்ற அரவிந்த கெஜ்ரிவால், தனக்கென எந்த துறையையும் வைத்துக் கொள்ளாமல் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் அனைத்து பொறுப்பு களையும் ஒப்படைத்து விட்டு தற்போது பெங்களூரில் இயற்கை வழி வைத்திய சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி கவிழ்ந்த போது, எப்படியாவது பதவியை பிடிக்கவேண்டும் என எண்ணிய அரவிந்த் கெஜ்ரிவால் இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் சிலரை விலைக்குவாங்க முயற்சித்ததாக ஆடியோ ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் எம்எல்ஏ.வான ராஜேஷ்கார்க் என்பவரும் பேசியதாக வெளியான ஆடியோவில் கீழ்க்கண்ட உரையாடல்கள் உள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவால்: நாங்கள் ஆட்சியமைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. மணிஷ்சிசோடியா காங்கிரசோடு தொடர்பில் உள்ளார். ஒன்று செய்யுங்கள். காங்கிரசை உடைத்து, 6 எம்எல்ஏ.க்களை வெளியே இழுத்து, புதிதாக ஒருகட்சியை ஆரம்பிக்க சொல்லுங்கள். அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களாக எங்களது ஆட்சிக்கு ஆதரவு அளிக்கவையுங்கள்.

ராஜேஷ் கார்க்: ஆகட்டும் ஐயா.

அரவிந்த் கெஜ்ரிவால்: நாங்கள் ஒன்றரை மாதமாக முயற்சித்து வருகிறோம். காங்கிரஸ் எங்களை ஆதரிப்பது போல் இல்லை. இந்த 6 எம்.எல்.ஏ.க்களும் பாஜக.வை ஆதரித்து வந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் முஸ்லிம்கள்.

ராஜேஷ் கார்க்: இது தொடர்பாக உரியவகையில் திட்டமிட தொடங்குகிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால்: அவர்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கமாட்டார்கள். அந்த ஆறு எம்.எல்.ஏ.க்களும் எங்களைதான் ஆதரிக்க வேண்டும்.

ராஜேஷ் கார்க்: ஆகட்டும் ஐயா, ஆகட்டும்.

இன்று வெளியான இந்த ஆடியோ ஆதாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆடியோடேப் வெளியானதை தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர் பதவியிலிருந்து அஞ்சலி தமானியா ராஜினாமா செய்துள்ளார். இதனால் அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply