மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப் பட்டுள்ளது. இதனை கண்டித்து பா.ஜ.க கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறி எங்களுடன் போராட்டம் நடத்தவேண்டும் என ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சட்ட சபையில் பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மேல்சபையில் முதல்–மந்திரி சந்திர பாபு நாயுடு பேசினார். அவர் கூறியதாவது:–

பாஜக.,வுடன் கூட்டணி அமைத்து இருந்த போதிலும் மாநிலநலன் விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் சமரசம் செய்ய போவதில்லை. மத்திய அரசு உதவிசெய்தால் மட்டுமே ஆந்திர மாநிலம் வளர்ச்சிபெறும். அந்த உதவியை பெற நான் தினமும் நிதிமந்திரி அருண் ஜெட்லியுடன் பேசி வருகிறேன்.

நான் பிறப்பிலேயே போராட்டம் குணம் கொண்டவன். அதனால் மத்திய அரசுடன் போராடி தேவையான நிதியைபெறுவேன். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேவருவது பெரியவிஷயம் அல்ல. ஆனால் அதனால் மாநிலத்துக்கு எந்தலாபமும் இல்லை.

மத்திய அரசில் இருந்தே ஆந்திர நலனுக்காக நான் போராடுவேன். அவர்கள் உதவிசெய்வார்கள் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. என்னை போன்ற நல்லதலைவர் இந்த நாட்டில் யாருமில்லை. 2019ல் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக ஆந்திரா திகழும் என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.

Leave a Reply