செஷல்ஸ் தீவுகளில் தனது சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸை வந்தடைந்தார்.

பிரதமர் நரேந்திரமோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். நேற்று இரவு, செஷல்ஸ் தலை நகர் விக்டோரியாவுக்கு போய்ச்சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல் வரவேற்றார். இந்நிலையில், இன்று காலை அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேலுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்தியா-செஷல்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து செஷல்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று மொரீஷியஸ் வந்தடைந்தார். இன்று அவர் மொரீஷியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் புர்யாக் மற்றும் பிரதமர் அனெரூட் ஜுக்நாத் ஆகியோரை சந்தித்து இந்தியா-மொரீஷியஸ் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். மாலை மொரீஷியஸ் பிரதமர் அனரூத் ஜூக்நாத் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்து வைக்கிறார். மொரிஷீயசில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Leave a Reply