இந்திய பெருங் கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி இலங்கை சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட இந்திய பெருங் கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர். மொரீஷியஸில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி இலங்கை சென்று உள்ளார்.

மூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக, இன்று பிரதமர் மோடி இலங்கை சென்றார். காலை 5.25 மணிக்கு கொழும்பு விமானநிலையம் சென்ற பிரதமர் மோடியை, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார். கடந்த 1987–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கு இந்தியபிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும். இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்திய–இலங்கை உறவுகுறித்த முக்கியமான பேச்சு வார்த்தையில் மோடி கலந்து கொள்கிறார்.

மதியம் இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே அளிக்கும் மதியவிருந்தில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடுகிறார். பிரசித்திபெற்ற புத்தஸ்தலமான மகா போதி சொசைட்டி மற்றும் இந்திய அமைதிப்படை நினைவு மண்டபத்தில் இலங்கையில் அமைதி பணியில் கலந்துகொண்டு உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். ஸ்ரீலங்கா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் இலங்கையின் வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் அதிபர்கள் ஏற்பாடுசெய்யும் விருந்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

Leave a Reply