இலங்கையில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று (சனிக் கிழமை) மத்திய மாகாணத்தில் உள்ள அனுராத புரத்துக்கு செல்கிறார். அவருடன் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே உள்ளிட்டோரும் செல்கிறார்கள்.

அதன் பிறகு பிரதமர் மோடி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப் பாணத்துக்கு செல்கிறார். அங்கு அவருடன் ரனில் விக்ரமசிங்கே மட்டும் செல்ல உள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பிரதமர் மோடி தலைமன்னாருக்கு சென்று கொடியசைத்து ரெயில் போக்கு வரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப் பாணம் பகுதிக்கு செல்லும் 2-வது வெளிநாட்டு பிரதமர் மோடியாவார். இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் டேவிட்கேமரூன் அங்கு சென்றார்.

Leave a Reply