அமெரிக்காவும், இந்தியாவும்தான் எனது தோல்விக்கு காரணம் என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார் .

இலங்கையில் கடந்த ஜனவரி 8-ந்தேதி நடந்த தேர்தலில் அதிபராக இருந்த ராஜ பக்சே படுதோல்வி அடைந்தார். அவரது முன்னாள் கூட்டாளி சிறி சேனா புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இலங்கை வருவதையொட்டி முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒரு சீன பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கர்கள், நார்வே நாட்டினர், ஐரோப் பாவை சேர்ந்தவர்கள் தேர்தலில் எனக்கு எதிராக வேலை செய்தனர். இந்தியாவின் ரா உளவுப் பிரிவு எனக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க உதவியது. இவை எல்லாம் வெளிப் படையாக எல்லோரும் அறிந்தது. அமெரிக்காவும், இந்தியாவும் என்னை பதவியில் இருந்து இறக்க தங்கள் தூதரகங்களை பயன்படுத்தியது என்றார்.

Leave a Reply