இலங்கையின் வடமேற்குப் பகுதியான தலைமன்னாரில் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முன்பு தலைமன்னார் பகுதியில் நிறுத்தப்பட்ட ரயில் சேவை, முற்றிலும் சீரமைக்கப்பட்டு, இன்று மீண்டும் ரயில் சேவை துவங்கியுள்ளது.

மேலும், தலைமன்னாரில் புதிதாகக் கட்டப்பட்ட ரயில் நிலையத்தையும், இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடன் இணைந்து அவர் திறந்து வைத்தார்.

முன்னதாக, சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அனுராதபுரம் சென்ற பிரதமர் மோடி, அங்கு புனிதமான மகாபோதி மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டார்.

Leave a Reply