இந்தியாவில் தற்போது நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நடப்பு நிதி யாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடையும் என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டி நேற்றிரவு புது டெல்லி வந்தார். அவர் இன்று பிரதமர் நரேந்திரமோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைகுறித்து சர்வதேச நிதியத் தலைவர் கிறிஸ்டின் லகார்டே நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.

இதன் மூலம் நாட்டின் மொத்தகொள்முதல் உற்பத்தி அதிகரிக்கும். பல்வேறு திட்டங்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தும் வகையில் ஜன் தன், ஆதார் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப் பட்டுள்ளது.இந்தியாவில் தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிக்கல்கள் நிறைந்தசட்டங்கள் உள்ளன. அவற்றை களைந்துவிட்டு, புதிதாக இளம் தலை முறையினருக்கும் பெண்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும். அப்போது தான் ஒருநாட்டின் தொழில் உற்பத்தி அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் அதற்கான வழிமுறைகள் பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கின்றனர்.அவர்களது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

அவர்கள் அப்பணியை செவ்வனே மேற்கொண்டால், நடப்பு நிதியாண்டிலேயே அதன் பொருளாதார வளர்ச்சி இலக்கை நிச்சயம் அடையலாம் என்று உறுதிகூறுகிறேன். வருங் காலங்களில் இந்தியா பொருளாதாரத்தில் அபரிதவளர்ச்சி அடைந்து, உலக பொருளாதார வீழ்ச்சியை களைவதில் முன்னுதாரணமாக திகழும் என்று நம்புகிறேன்.இந்தியாவில் பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களை களையும் போது, அவற்றின் பொருளாதார வளர்ச்சி அதிகளவில் முன்னேறும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன்.இவ்வாறு கிறிஸ்டின் லகார்டி கூறினார்

Tags:

Leave a Reply