ஐரோப்பிய ஒன்றியத்தின் தலை நகரான பிரஸ்ஸல்ஸூக்கு பிரதமர் நரேந்திரமோடி மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்துசெய்யப்பட நேர்ந்ததற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உயர்நிலை குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

கனடா நாட்டில் பிரதமர் நரேந்திரமோடி, அடுத்தமாதம் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். அப்போது ஜெர்மனி, பிரான்ஸ் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலை நகர் பிரஸ்ஸல்ஸூக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்த சுற்றுப் பயணம் தொடர்பான விவரங்களை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா தெரிவித்தது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இதற்கு, இத்தாலிய கடற்படை வீரர்கள் குறித்தவழக்கு விசாரணை விவகாரம் காரணம் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிரஸ்ஸல்ஸில் மோடி மேற்கொள்ளவிருந்த பயணம் கைவிடப்பட்டு விட்டது.

இந்நிலையில், மோடியின் பயணம் ரத்து செய்யப் பட்டதற்கு ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்ற உயர்நிலை குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த குழுவின் தலைவர் ஜாஃப்ரி வேன் ஆர்டன் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடியின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பயண தேதியை உறுதிசெய்வதற்கு சிறிது நாள்கள் அவகாசம் தேவைப்பட்டது.

அதற்குள்ளாக, மோடியின் பயண ரத்து , எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது. மோடி, தனது ஐரோப்பிய ஒன்றியப் பயணத்தை மறுபடியும் தொடங்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாடாளுமன்ற நிலைக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் நடந்து வரும் இத்தாலிய கடற்படை வீரர்கள்மீதான வழக்கு விசாரணை விவகாரம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிதுநெருடலை ஏற்படுத்தியுள்ளது, உண்மைதான். அதற்காக, இந்தியாவுடனான உறவை விட அந்தவழக்கு விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply