டெல்லியில் நேற்று காலை பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திரமோடி, பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்துகொண்டனர்.அப்போது, பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஓட்டெடுப்பின் போது, சபையில் ஆஜராகாத 25

எம்பி.க்களின் பெயர்களை வெங்கையா நாயுடு வாசித்தார். அவர்கள் எழுந்து நின்றனர். மத்திய அமைச்சர் பபுல்சுப்ரியா, சத்ருகன்சின்கா, வருண்காந்தி, பூனம்மகாஜன், பிரீதம்முண்டே (மறைந்த கோபிநாத்முண்டே மகள்) ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.

சபைக்கு வராததற்கு காரணமாக, 2 உறுப்பினர்கள் துக்க சம்பவத்தையும், சுப நிகழ்ச்சியையும் தெரிவித்தனர். மற்றவர்களால் தகுந்த காரணத்தை சொல்லமுடியவில்லை. அவர்களை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக கண்டித்தார். வருங் காலத்தில் பாராளுமன்றம் மற்றும் மேல்சபையில் முக்கிய மசோதா தாக்கல் மற்றும் விவாதங்களின் போது, உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

Tags:

Leave a Reply