மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி லக்வி விடுதலை செய்யப் படவில்லை; அவர் இன்னும் சிறையில் தான் இருக்கிறார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்பாசித் கூறினார்.

இது தொடர்பாக மேற்கு வங்கமாநிலம், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் புதன் கிழமை தெரிவித்ததாவது:

பயங்கரவாத தாக்குதல் (மும்பை பயங்கரவாதத் தாக்குதல்) நடைபெற்ற இடமானது, இந்தியாவில் உள்ளது. ஆகையால், இது தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு நிறைவடைய மேலும் சிலகாலம் பிடிக்கும். இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவிடம் இருந்து அனைத்து ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டுள்ளன. இந்தவிவகாரத்தில், பலகுறைபாடுகள் காணப்படுகின்றன.

வளர்ச்சி, அமைதி ஆகியவை மீது இரு நாடுகளின் தலைமையும் நம்பிக்கை கொண்டுள்ளன. ஆகையால், இருதரப்பு உறவுகளில் சுமுகநிலையை ஏற்படுத்த இது வரலாற்று வாய்ப்பாகும்.

சார்க் அமைப்பின் அடுத்த உச்சிமாநாடு, பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்பதால் அது மிகப் பெரிய வெற்றியடையும் என நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply