மேக தூது அணைக்கட்ட மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்க வில்லை என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

காவிரி ஆற்றின்குறுக்கே மேக தூது, ராசி மணல் ஆகிய இடங்களில் தடுப்பணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு விவசாய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

சென்னையில் 21ம் தேதி நடக்கும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து அழைப்புவிடுத்து வருகின்றனர். பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கமலாலயத்தில் நேற்று சந்தித்து அழைப்புவிடுத்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர் களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

தமிழக விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு, காவிரியில் அணைகள் கட்டுவது தமிழக விவசாயிகளுக்கு விரோதமானசெயல். இதற்கு மத்திய அரசு இது வரை அனுமதி அளித்ததற்கான குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில் மத்திய அரசை குற்றம்சொல்வது நியாயமில்லை. விவசாயிகள் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் யார் கலந்து கொள்வது என்பதை பரிசீலித்து அறிவிப்போம். என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply