கர்நாடகாவில் மணல்கொள்ளை மாபியாவிற்கு எதிராக சிறப்பாக செயல் பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவிக் குமார் மரணமடைந்தது தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில பாஜக மக்களவை உறுப்பினர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் , கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ரவியின் மரணம்குறித்த சர்ச்சை இன்று கர்நாடக சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. சிபிஐ விசாரணை கோரி எதிர்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டதால், அவை வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வெளியிலும் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply