விஸ்வ பாரதி பல்கலை கழகத்தின் புதிய வேந்தராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இது வரை இந்த பதவியை வகித்துவந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததையடுத்து புதியவேந்தராக பிரதமர் மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தபதவியில் இருப்பார்.

பல்கலை கழகத்தின் நிர்வாககுழு கடந்த ஆண்டு ஜுலை மாதம் மோடியை வேந்தராக நியமனம் செய்வதற்கான தீர்மானத்தை நிறை வேற்றி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்து அனுப்பியிருந்தது. இந்நிலையில், பல்கலை கழகம் வெளியிட்டுள்ள தகவலில் மோடி வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply