தமிழை தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் குரல் எழுப்பி வரும் பாஜக எம்.பி. தருண் விஜய்க்கு காரைக்குடி கம்பன் கழகம் 'அருந்தமிழ் ஆர்வலர்' விருது வழங்கவுள்ளது.

ஜனவரி 11-ம் தேதி கன்னியாகுமரியில் திருக்குறள் பயணம் தொடங்கிய தருண்விஜய் எம்.பி., தமிழகத்தில் உள்ள தமிழ்புலவர்கள், கவிஞர்கள், வீரமறவர்கள் உள்ளிட்டோரின் நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜனவரி 13ல் சிவகங்கை மாவட்டத்துக்கு வருகைதந்த அவர், நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பர் சமாதி, ஒக்கூர் மாசாத்தியார் நினைவிடம், திருப்பத்தூரில் மருது பாண்டியர் நினைவிடம், மற்றும் மகிபாலன் பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவிடம் ஆகிய இடங்களிலும் வேலுநாச்சியார் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் சிறுகூடல் பட்டியில் உள்ள கவிஞர் கண்ணதாசன் பிறந்த வீட்டையும் பார்வையிட்டு சென்றார்.

இந்நிலையில், காரைக்குடி கம்பன் கழகத்தின் 77வது ஆண்டு கம்பன்விழா காரைக் குடியில் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில் கம்பன் விழாவை தொடங்கி வைக்க வரும் தருண் விஜய்க்கு, 'அருந்தமிழ் ஆர்வலர்'என்ற விருதை காரைக்குடி கம்பன் கழகம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.

Leave a Reply