பிரதமர் நரேந்திரமோடி இவ்வாண்டு இரண்டுமுறை ரஷியா பயணம் செல்ல உள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் (பிரேசில்-ரஷியா-இந்தியா-சீனா-தென் ஆப்பிரிக்கா) கலந்துகொள்ள வருகிற ஜூலை மாதம் ரஷியா செல்கிறார். பின்னர் இந்த ஆண்டு இறுதியில் இருதரப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள

மாஸ்கோ பயணம் மேற்கொள்ள உள்ளார். ரஷியா வெற்றிதினம் வருகிற மே மாதம் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ரஷியா செல்ல உள்ளார்.

பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிகர், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரும் ரஷியா செல்ல உள்ளனர். அவர்கள், ரஷிய பாதுகாப்புதுறை மற்றும் வெளியுறவுத் துறை மந்திரியை சந்தித்து முக்கிய விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Leave a Reply