பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தீர்வுகண்டு வரும் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. தற்போது மின்சாரம், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 35-க்கும் அதிகமான தீர்ப்பாயங்கள் இயங்கி வருகின்றன.

இதில் ஒரேமாதிரியான பிரச்னை தொடர்பான நடவடிக்கைகளை கொண்ட தீர்ப்பாயங்களை ஒருங் கிணைத்து அதன் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக மத்திய சட்டமைச்சகம் அனைத்து துறைகளின் அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. . பிரச்னைகளுக்கு விரை வாகவும் சுமூகமாகவும் தீர்வுகாண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply