சுதந்திரபோராட்ட தியாகிகளான மாவீரன் பகத் சிங், ராஜகுரு ,சுக்தேவ் உள்ளிட்டோரது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. வெள்ளையர்களை எதிர்த்துபோராடி அவர்களால் 24 வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன்தான் பகத்சிங். பகத்சிங் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, பஞ்சாப் சென்ற அவர், அம்மாநிலத்து இளைஞர்கள் நாட்டுக்காக செய்ததியாகங்களை நினைவுகூர்ந்தார். பஞ்சாப் மாநிலம் சுதந்திர போராட்டத்திற்கு அரும்பாடு பட்டதாகவும், அந்த மாநிலத்து இளைஞர்கள் பலர் தங்களது இன்னுயிரையே இழந்தார்கள் என்றும் பிரதமர் மோடி புகழ்ந்துபேசினார். பின்னர் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்க்கோவிலுக்கும் சென்று பிரதமர் வழிபட்டார்.

அப்போது பொற்கோவிலை சுற்றி அவர் கம்பீரமாக நடந்துசென்ற போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்குதிரண்டனர். பிரதமரின் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் மோடி ஜாலியன் வாலாபாக் நினை விடத்திற்கும் சென்றார். அங்கு தியாகிகளுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply