பாகிஸ்தானில் பாகிஸ்தான் டே (பாகிஸ்தான் குடியரசு தினம்) கொண்டாடப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் தேசிய தினத்தையொட்டி, அந்நாட்டு பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply