பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், சிறுபான்மையின மக்கள் மத்தியில் முற்போக்கான மனப் பான்மை ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில சிறுபான்மை ஆணையங்களின் 10-வது வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சிறுபான்மையின இணை அமைச்சர் முகதர் அபாஸ்நக்வி, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து இளைஞர்கள் மத்தியில் முற்போக்கான மனோநிலை காணப்படுகிறது.

இதனால், தீவிரவாதிகளால் முஸ்லிம் இளைஞர்களை தவறாக வழி நடத்த முடியாமல் போய் விட்டது தீவிரவாதிகளின் தீய நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் இளைஞர்களின் ஆதரவு சரிந்து கொண்டு வருகிறது. முஸ்லிம் இளைஞர்கள் தேசதுரோக சக்திகளை தனிமைப்படுத்தி விட்டனர். இதனால் அவர்கள் சோர்வுற்று இருக்கின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சியில், அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தேசவிரோத வழக்குகளில் கைது செய்யப்படுவது குறைந்துள்ளது. இந்தப்பாதை சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பான வழித் தடத்தில் வளர்ச்சிப்பாதையை நோக்கி பயணிக்கும் சூழல் பிரகாசமாக உள்ளது" என்றார் அவர்.

Leave a Reply