சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நிமோனியா காய்ச் சலால் லீ குவான் 91 வயதில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு வரும் 29-ல் நடைபெறுகிறது. லீ குவான் இறுதிச் சடங்கில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் வெளியிட்டிருந்த இரங்கல்செய்தியில், சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ மரண மடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம். தொலை நோக்குப் பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாக திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறையபாடங்களை தருவதாக இருக்கிறது.

அவரது இழப்பு வருத்த மளிக்கிறது. லீயின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனை எப்போதும் உடன் இருக்கும் . லீயின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply