ஸ்மார்ட் போனும், இண்டர் நெட் இணைப்பும் இருந்தால் மட்டுமே ட்விட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர முடியும் என்ற நிலை இனியும் இல்லை. ஆம்.. இப்போது, மோடியின் ட்விட்டர் பதிவுகளை இலவசமாக உங்கள் செல் போனில் குறுஞ் செய்திகளாக பெறலாம். 'ட்விட்டர் சம்வாத்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்திற்கான அறிவிப்பையும் ட்விட்டரிலேயே வெளியிட்டு அசத்தினார் பிரதமர்.

பிரதமரை சந்திப்பதற்காக, முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் ட்விட்டரின் சர்வதேச தலைமைசெயல் அதிகாரியான டிக் கொஸ்டோலோ, 'ட்விட்டர் சம்வாத்' திட்டத்தை நேற்றுதொடங்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து மோடி "நம்முடைய உறவை இன்னும் ஆழமாக்கி கொள்வோம். 011 3006 3006 இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுங்கள், என்னுடைய ட்வீட்களை உங்கள் செல்போனில் குறுஞ் செய்திகளாக பெறுங்கள்" என்று ட்விட்டரில் ட்வீட்செய்தார்.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியான இந்த திட்டத்தில் பிரதமர் மோடி உட்பட வெளியுறவு துறை அமைச்சகம், பெங்களூர் நகர காவல்துறை மற்றும் குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட பலமாநில முதல்வர்களும் இணைந்துள்ளனர்.

Leave a Reply