பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த 'தூய்மை இந்தியா' திட்டத்தின் வரிசையில், மாநிலத்தில் 'தூய்மை மராட்டியம் திட்டம்' விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்று சட்ட சபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்

கழிவறைகள் கட்டுவதும், திடக் கழிவு மேலாண்மையும் தான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று கூறிய அவர், இத்திட்டத்தை கண்காணிக்க நகர்புற மேம்பாட்டுத் துறை தலைமையில் தனி இயக்குனரகம் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மும்பைக்கு வெளியே அதாவது நகராட்சி பகுதிகளில் கழி வறை வசதிகள் இல்லாதவீடுகளில், கழிவறை கட்ட மத்திய–மாநில அரசுதரப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.12 ஆயிரம் நிதி அளிக்கப்படும் என்று கூறியவர், இதில் 4 ஆயிரம் ரூபாய் மத்திய அரசும், 8 ஆயிரம் ரூபாய் மாநிலஅரசும் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

Tags:

Leave a Reply