பிகாரில் பொதுத்தேர்வுகளில் "பிட்" வைத்து காப்பி அடிக்கும் பழக்கம் வெகுகாலமாக உள்ளது! தற்போது காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு "பிட் கொடுத்து உதவ மாணவர்களின் நண்பர்களும், பெற்றோர்களும், பள்ளி கட்டிடத்தின் மீது ஏறி நிற்கும் புகைப்படம் பத்திரிக்கைகளில் வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் 4 மாவட்டங்களில் "பிட்" மற்றும் காப்பி அடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர்மீது கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. இது பற்றி நிதிஷ்குமாரும் கவலை தெரிவித்திருக்கிறார்.

பாஜகவுடன் கூட்டு இல்லாததால் ஊடகங்கள் பிகார் முதல்வர் நிதிஷ் மீது மாபெரும் "வன்மம்"- பாராட்டாமல் அவரை மென்மையாக கடிந்து கொண்டுள்ளது. ஒரு வேளை பாஜக ஆளும் மாநிலங்களில் இது நடந்திருந்தால் "ஊடகங்கள் காட்டில் மழைதான்" ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு வேறு செய்தியே வேண்டி இருந்திருக்காது!

சரி சப்ஜெட்டுக்கு வருவோம்! பிகாரிலும் உ.பி-யிலும், மாணவர்கள் "டேபிள் மீது கத்தியை"– வைத்துக்கொண்டு, ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்து "பிட்" அடிப்பது நீண்ட நாள் சரித்திரம். இன்றைய மத்திய உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் உ.பி. முதல்வராக இருந்த போது இதற்கு தடை விதித்து நடந்து கொண்டார். மாணவர்கள் மட்டுமல்ல, இதற்கு காரணமான பெற்றோர்களையும் கைது செய்///தார்.

விளைவு….. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் 'ஓஹோ" என்று கூப்பாடு போட்டனர். ராஜ்நாத்சிங் கடும் கண்டனங்களை சந்திக்க வேண்டியிருந்தது.பின்னாலே ஆட்சியையும் இழந்தார்.."பிட்"–லாபி அவ்வளவு பவர்ஃபுல்" ஆனது..அதனால்தான்..முன்னாள் பிஹார் முதல்வரும் தற்போதயை நித்திஷ் குமார் கூடாளியுமான "லல்லு பிரசாத் யாதவ்" "நான் ஆட்சிக்கு வந்தால், பரிட்சையில் காப்பி அடிக்க புத்தகத்தையே தருவேன்" உறுதி(?) அளித்துள்ளார்..

இன்று நிதிஷ்குமார் ஊடகங்களின் "செல்லப்பிள்ளை" அதனால் இந்த காப்பி அடிப்பு– "பிட்" வைப்பு பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பாவம் பாட்னா ஹைகோர்ட் ரொம்ப "சின்சிரியராக" இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. பிகார் அரசிடமிருந்து அறிக்கை கேட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் நடந்த விவகாரங்கள் நம்மை கவலை கொள்ளச்செய்துள்ளது..கல்வித்துறை ஊழலில் பிகாரை விஞ்சும் வளர்ச்சியும் அதற்காக "டெக்னாலஜி" சிறப்பாக பயன்படுத்தி கொள்ளப்படிருக்கிறது நம்மை வாய் பிளக்கச்செய்கிறது..

தர்மபுரி–கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள்கள் திருடப்பட்டு–"வாட்ஸப்" மூலம் மாணவர்களுக்கு வினியோகிக்க பட்டுள்ளது..

வாட்ஸப் தவிர திருடப்பட்ட வினாத்தாள்கள்..ஜெராக்ஸ் எடுக்கப்பட்டும் வினியோகிக்கப்பட்டுள்ளது..

வினாத்தாள்கள் திருடப்படுவது தமிழகத்தில், அதிசயமாக நிகழ்ந்து விடவில்லை..ஏற்கன்வே சில ஆண்டுகளுக்கு முன்பு, இது மாதிரி வினாத்தாள்கள் வெளியாகி, இதில் சம்பந்த பட்ட குற்றவாளிகள், சங்கிலி தொடர்போல கைது செய்யப்பட்டதும், நாம் அறிந்ததே.

இதில் வினாத்தாள்கள் "எப்படி கிடைத்தது?" என்ற வினாவிற்கு…மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு அச்சகத்தில், தமிழக வினாத்தள்கள் அடிக்கப்பட்டபோது..அங்கு அவைக்கு விலைபேசப்பட்டு தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது..

இந்த முறை வினாத்தாள்கள் எப்படி எங்கு யாரால் திருடப்பட்டது?–என்பது இன்னும் தெரியாத நிலையில், அது வினியோகிக்கப்பட்ட சங்கிலித்தொடரில் சம்பந்த பட்ட குற்றவாளிகள் கல்வித்துறையை சார்ந்த மிகப்பெரிய அதிகாரிகள். மற்றும் ஆசிரியர்கள் என்பதுதான் மாபெரும் அதிர்ச்சி அளிக்கு செய்தியாகும்,,

அதோடு மட்டுமின்றி,"காப்பி அடிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க" சில பள்ளிகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட "தேர்வுகண்காணிப்பாளர்களை"விதிகளை வீசி எறிந்துவிட்டு, வேறு பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு, "லிஸ்ட்டில்" இல்லாத– மற்றும் மாணவர்களுக்கு "உதவும்" தேர்வு கண்காணிப்பாளர்கள்" பணிக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது..

பல பள்ளிகள் கள்வி வியாபார போட்டியில் கடுமையாக இறங்கியுள்ளது..தங்கள் மாணவர்கள் அதிகமான மார்க் எடுக்க வைப்பதன் மூலம் அதிகமான மாணவ்ர்களை சேர்க்கும்"மாட்டுத் தொழுவங்களாக" மாறி வருகிறது..

அதிகசதவீத பாஸ் –கொடுக்கும் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் "வியாபார சந்தையாக"வும் ஆகிவருகிறது..

இதை ஊக்குவிக்கும் வண்ணம் பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை சேர்க்க "ஒரே பள்ளிகளை" ஊக்குவிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது..

இதைவிட மேலாக "அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?"என்கிற "கவுன்சிலிங்" மற்றும் மாணவ-மாணவியருக்கு கூட்டங்கூட்டமாக "வழிகாட்டும் மாநாடுகள்" எல்லா பத்திரிக்கைகள் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படுவது மேலும் வருத்தமளிக்கும் செய்தியாகும்..

இதன் வெளிப்பாடுகளில் ஒருபகுதிதான் இந்த போட்டியில் "ஓடமுடியாதவர்களுக்கு ஆறுதலாக"–குறுக்கு வழி வெற்றிக்கு வகை செய்யும் "வினாத்தாள்கள் வினியோகிக்கும்" அவலங்கள்…

இதற்காகத்தான் பிரதமர் மோடி அவர்கள் தனது "மனந்திறந்த பேச்சு" ரேடியொ ஒலிபரப்பில்..

மாணவர்களுக்குபரிட்ச்சைக்கு வெற்றிக்கு வாழ்த்து கூறி உரையாற்றும் போது, "மார்க்க் எடுக்கும் ஒரு நோக்கோடு மட்டும் " படிக்காமல் "புரிந்து படித்து"–நல்ல எதிர்கால சந்ததிகளாக மாணவர்கள் வரவேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்..

லல்லு பிரசாத்தின் " நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..புத்தகத்தை பார்த்து எழுத அனுமதிப்பேன்"–என்ற கல்வியிலும் ஓட்டு அரசியலும்.. பிஹாரின் பிட்டும், உ.பி.யின் கத்தியும் நாம் மிகவும் கவலை பட வேண்டிய விஷயமாகும்..

இந்தியாவில் ஏதோ சில வேற்று மாநிலங்களில்தானே இது நடக்கிரது என நாம் நினைக்கும் முன்பு–அதுவே தமிழகத்திலும், "வேறு மாதிரியாக" நடப்பது, இந்தியாவின் எதிர்காலமான "நம் இளைஞர்களை" பற்றி கவலையுறச்செய்கிறது..

இதை ஆரம்பத்திலேயே "கிள்ளிவிடுவது" நாட்டிற்கு நல்லது…..தமிழகத்திற்கு மிகவும் நல்லது..

பாட்னா ஹைகோர்ட் போல சென்னை உயர்நீதி மன்றமும் தலையிட வேண்டியிருக்குமா?–அல்லது "மக்களின் முதல்வரும்–"மா"க்களின் முதல்வருமே "சரி செய்து" விடுவார்களா?

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply