காஷ்மீர் சபாநாயகரை 'இந்து அடிப்படைவாதி' என்று விமர்சனம் செய்ததை தொடர்ந்து நேற்று சட்டப் பேரவையில் அமளி ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் நேற்று வழக்கம் போல சட்ட பேரவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் ஜாவைத் ரைனா, சபாநாயகரை 'இந்து அடிப்படைவாதி' என விமர்சித்ததாகக் கூறி, பாஜக தலைவர்கள் சபாநாயகரின் மேடை அருகில்வந்து கூச்சலிட்டனர்.

அவர்களுக்கு எதிராக தேசியமாநாட்டு கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் கேள்வி நேரத்தின் போது, சுயேட்சை தலைவர் இன்ஜினீயர் ரஷீத், 2013ம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட அப்சல்குருவின் பொருட்களை காஷ்மீரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி, சபாநாயகரின் மேடையருகே சென்றார். அவரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

Tags:

Leave a Reply