பிஹாரில் முன் கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது பாஜக. இதனை வரும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளன்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பாட்னாவில் தொடங்கி வைக்கின்றனர்.

பிஹாரில் தலித்சமூகத்தினர் அதிகம் வசிக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில், தலைநகர் பாட்னாவில் மாபெரும் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து பீகாரில் மிகவும் கவனமாக தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக . இதனை தொடர்ந்தே தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

Leave a Reply