ஹிந்து மதத்திலிருந்து பிறமதங்களுக்கு மாறியவர்களை, மீண்டும் ஹிந்துமதத்துக்கு மாற்றுவது தொடர்பான விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நடவடிக்கைகளுக்கும், பாஜக.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத மாற்றத் தடைச்சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்றும், அதை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கவேண்டும் என்றும் ஆரம்பம் முதலே, பாஜக வலியுறுத்தி வருகிறது.

தேசவிரோத செயல்களை அனுமதிக்க மாட்டோம்: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் விடுவிக்கப் பட்ட நிலையில், அங்கு நிலவும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பாஜக அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துவருகிறது.

பாஜக.,வுக்கும், மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே நிலவும் கொள்கை வேறுபாடுகள் குறித்த சரியானமுடிவை, சரியான நேரத்தில் பாஜக தலைமை எடுக்கும். எனினும், தேசவிரோதச் செயல்களை கட்சி எப்போதும் அனுமதிக்காது என்று கல்ராஜ்மிஸ்ரா கூறினார்.

Leave a Reply