தூய்மை காங்கா திட்டம்தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி விடுத்துள்ள அழைப்பை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், உ.பி. முதல்வர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கங்கை நதியோரம் அமைந்திருக்கும் மாநிலங்களில் முதல்வர் களுடன் தூய்மை கங்கா திட்டத்தை செயல்படுத்துவதாக தொடர்பாக ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தர்காண்ட் முதல்வர் ஹரீஷ்ரவாத், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர்தாஸ் ஆகியோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை ஏதும் தெரிவிக்க வில்லை.

கங்கா பேசின் வாரியம் சார்பாக நடைபெறும் 6-வது கூட்டம் இது வென்றாலும். இக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில், கங்கை நதியோரம் உள்ள மாநில முதல்வர் 'தூய்மை கங்கா' திட்டத்தை செயல்படுத்து வதற்கான யோசனைகளை, பரிந்துரைகளை கேட்டறிவார் எனத்தெரிகிறது.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.4000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply