மக்களின் குறைகளை தீர்க்க, "துடிப்பான அரசும் துரிதமான தீர்வும்' (பிரகதி) எனப்படும் நவீனத் தொழில் நுட்பத்திலான புதிய நடை முறையை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கிவைத்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்:

ஒவ்வொரு மாதத்தின் நான்காவது புதன் கிழமைகளில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறைமூலம் மத்திய அரசு செயலர்கள், மாநில தலைமை செயலர்களுடன் கலந்துரையாடுவார்.

"டிஜிட்டல் டேட்டா மேனேஜ்மென்ட்', "ஜியோஸ்பேஷியல்', உள்ளிட்ட நவீன தொழில் நுட்ப முறைகளின் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளை பிரதமர் சுட்டிக் காட்டி, அதுகுறித்த விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டறிவார். அந்த பிரச்னைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூன்று நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைச்செயலர்கள் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அந்தப் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும்வரை அதுகுறித்த விளக்கங்கள் கேட்டறியப்படும். இதைத்தவிர, மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் விளக்கங்களைக் கோருவார். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த புதியநடைமுறையால் மக்களின் குறைகள் முழுமையாகத் தீர்க்கப்படும்.

Leave a Reply