இந்தியாவின் 12- வது நூற்றாண்டு தத்துவ ஞானியான பசேவேஷ்வராவின் சிலை லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைக்கபட்டுள்ளது. இந்தசிலையை தனது இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் திறந்து வைக்க வேண்டும் என கோரி, சிலை அமைக்க பெரும் முயற்சி எடுத்த லண்டன் லாம்பெத் நகர முன்னாள் மேயர் நீரஜ்பாட்டீல், பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இது குறித்து பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 12வது நூற்றாண்டு தத்துவ ஞானிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சிறப்பு மரியாதையை தெரிவித்தார். பசவேஷ்வ ராவைவும் அவரது தத்துவங்களையும் பெரிதும் மதிப்பதாகவும், பிக்பென்பெல் மற்றும் பிரிட்டிஸ் பாராளுமன்றத்தின் பின்புறம் இந்த சிலையை அமைக்க திட்டஒப்புதலை பெறுவதற்கு முயற்சி எடுத்த இந்திய சமூகத் தினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் பிறந்த பசவேஷ்வரா (1134-1168) ஜனநாயகத்தின் வழிகாட்டியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழந்தார். சாதி இல்லாத சமூகத்துக்காகவும், ஜாதி மத பாரபட்சத்துக்கு எதிராக கடுமையாக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply