பீகார் முதல்மந்திரி நிதிஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துபேசினார். இந்த சந்திப்பின்போது, மாநிலத்தில் 14 வது நிதிகமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதால் 50 ஆயிரம்கோடி மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மத்திய அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கோரினார்.

கடந்த 2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார் 17 ஆண்டு கால கூட்டணியை முறித்துகொண்டு வெளியேறினார். இந்த நிலையில், பிரதமர் மோடியை முதல் முறையாக நிதிஷ்குமார் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதிஷ்குமார் கூறுகையில், நிதிகமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதில் மாநிலத்துக்கு 50 ஆயிரம்கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கும் மத்திய அரசு அளித்த நிதிஉதவியும் குறைக்பட்டுள்ளது. இதன் காரணமாக பீகார் மாநிலத்துக்கு ஏற்பட்ட நிதிச்சுமையை சமாளிக்க இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்" என்று தெரிவித்தார்.

இந்தசந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply