ஜாட் இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு சட்டவரம்புக்கு உட்பட்டு தீர்வுகாணப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜாட்சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். கடந்த காங்கிரஸ் அரசு 2014 மார்ச் 4ம் தேதி ஜாட்சமுதாயத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பட்டியலில் இணைக்க உத்தரவுபிறப்பித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் கோகோய், நாரிமன் அடங்கிய அமர்வு, ஜாட்சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்தது செல்லாது என கடந்த 17ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஜாட்சமுதாய தலைவர்கள் 70 பேர் அடங்கிய குழு, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப்பேசியது.

தங்கள் சமூகத்தை ஓபிசி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று பிரதமரிடம் ஜாட்சமுதாய தலைவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை கவனமாக கேட்டறிந்த பிரதமர், இட ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக சட்ட வரம்புக்கு உட்பட்டு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்

Leave a Reply