வசதிபடைத்தோர் எரிவாயு மானியத்தை துறக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இதற்கான பிரச்சாரத்தை அவர் துவக்கிவைத்தார்.

பிரதமர் பேசும் போது, "சிலிண்டர் நேரடி மானியத்திட்டம் அமல் படுத்தப்பட்டதன் மூலம் மானியத்தை தவறாக பயன் படுத்துவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வசதிபடைத்தோர் தாமாகவே முன்வது எரிவாயு மானியத்தை துறக்கவேண்டும். இந்தப் பிரச்சாரம் நாடுமுழுவதும் பரப்பப்பட வேண்டும்.

இதுவரை 2.8 லட்சம் வாடிக்கையாளர்கள் எரிபொருள் மானியத்தை துறந்துள்ளனர். இதனால், அரசால் ரூ.100 கோடிவரை சேமிக்க முடிந்துள்ளது. எனவே, வசதி படைத்தோ பெருமளவில் முன்வந்து எரிவாயு மானியத்தை துறக்கவேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் இத்தருணத்தில் எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா தன்னிறைவு பெறுவது மிகவும் அவசியமானதாகும். இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியின் அளவை வரும் 2022-ல் 10% ஆக குறைக்க வேண்டும். தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியின் அளவு 77% ஆக உள்ளது.

இன்னும் 4 ஆண்டுகளில், பைப் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தற்போதுள்ள 27 லட்சம் வீடுகளில் இருந்து 1 கோடி வீடுகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

Leave a Reply