முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அவரது வீட்டுக்கு நேரில்சென்று பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குடியரசுத் தலைவர் மரபுகளை மீறி வாஜ்பாய் இல்லத்துக்கே சென்று விருதை வழங்கியது பற்றி குறிப்பிட்ட மோடி, "ஜனாதிபதியின் இந்தச்செயல் கவுரவத்தையும், கருணையையும் பிரதிபலிக்கிறது. இதற்காக குடியரசு தலைவருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நாம் நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த வாஜ்பாயிக்கு பாரதரத்னா விருது வழங்க ஒருவாய்ப்பு கிடைத்தது நினைத்து பெருமை கொள்ள வேண்டும்

அடல்ஜியின் வாழ்க்கை தேசத்துக்கு அர்ப்பணிக்கப் பட்ட ஒன்று. ஒவ்வொரு விநாடியும் நாட்டிற்காகவே வாழ்ந்தார், சிந்தித்தார். இந்தியாவில் என்னைப்போன்ற கோடிக் கணக்கான தொண்டர்களுக்கு வாஜ்பாய் அகத் தூண்டுதலாக இருந்துள்ளார்.

இனிவரும் தலைமுறைகளுக்கும் அவர் தொடர்ந்து தூண்டுகோலாக இருப்பார். அவர் தொடர்ந்து தூண்டுகோலாக இருக்க நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

பாரத ரத்னா விருது வழங்கிய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துகொள்கிறேன். . என்னை போன்ற பல இந்தியர்களுக்கு வாஜ்பாய் உத்வேகம் அளிக்ககூடியவராக இருப்பார். வாஜ்பாயின் வாழ்க்கை நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கவும் மற்றும் வழி காட்டவும் அந்த இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

6 ஆண்டுகள் பிரதமராக இருந்த வாஜ்பாய் 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி பிறந்தவர் ஆவார். 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவுசெய்த காங்கிரஸ அல்லாத முதல் பிரதமர் வாஜ்பாய் என்ற பெருமைக் குரியவர் ஆவார். கட்சி வரம்புகளை கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் . 1998 மே மாதம் ராஜஸ்தானில் அணு குண்டு சோதனை வாஜ்பாய் ஆட்சியில்தான் நடந்தது. மேலும் போக்ரனில் 5 குண்டுகளை வெடிக்கச்செய்து இந்தியா அணு ஆயுத நாடு என்பதை வாஜ்பாய் அறிவித்தார்.

பாரத ரத்னா விருதுபெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply