டில்லியில் நடைபெற்றள ஆம் ஆத்மியின் தேசியகுழு கூட்டத்தில் பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்தர யாதவ்வை கட்சியிலிருந்து வெளியேற்றுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கூட்டத்தில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய யோகேந்திர யாதவ், ஆம் ஆத்மியில் இன்று ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. கட்சிகூட்டத்தில் வன்முறை தலைவிரித் தாடியது. இது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. ஒருகோரிக்கையோ, விவாதமோ ஏதும் நடத்த கூட்டத்தில் அனுமதிக்க்ப்படவில்லை. இதுமிகவும் வெட்க கேடானது. எனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றார்.

Leave a Reply