ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சமூக ஆர்வலர் மேதாபட்கர் விலகினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "டெல்லியில் ஆம் ஆத்மி கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் துரதிர்ஷ்ட வசமானது. அரசியல் கொள்கைகள் மிதித்து நசுக்க படுகின்றன.

பிரசாந் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு நிகழ்ந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்." என்றார் மேதா பட்கர்.

ஆம் ஆத்மியிலிருந்து விலகியவர்கள் பட்டியல்:

அஞ்சலி தமானியா, இவர் மார்ச் 11, 2015ல் விலகினார்.

வினோத்குமார் பின்னி, இவர் பிப்ரவரி 2015-ல் விலகினார்.

ஷாசியா இல்மி, இவர் மே, 2014-ல் விலகி ஜனவரி 2015-ல் பாஜகவில் இணைந்தார்.

கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத், இவர் மே-2014ல் விலகினார்.

மதுபாதுரி, இவர் பிப்.2014-ல் விலகினார்.

எஸ்.பி. உதயகுமார் (கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கம்), இவர் அக்டோபர் 2014-ல் விலகினார்.

அசோக் அகர்வால், இவர் மார்ச், 2014-ல் விலகினார்.

மவ்லானா மக்சூத் அலி காஸ்மி, இவர் ஏப்ரல், 2014-ல் விலகினார்.

Leave a Reply