மிஸோரம் ஆளுநர் அஜீஸ்குரேஷி சனிக்கிழமை பதவி நீக்கம் செய்யப் பட்டார். மத்திய அரசுடன் மோதல்போக்கை கடைப்பிடித்த அவர், தன்னை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க முயற்சிகள் நடப்பதாக குற்றம்சாட்டி உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார்.

அவரது பதவிக்காலம், 2017ம் ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில், அவரை மத்திய அரசு அதிரடியாக பதவிநீக்கம் செய்திருக்கிறது.

இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மிஸோரம் ஆளுநர் பதவியிலிருந்து அஜீஸ் குரேஷி நீக்கம் செய்யப்படுகிறார்; மிஸோரம் மாநிலத்துக்கு புதிதாக ஆளுநர் நியமிக்கப்படும் வரை, அப்பதவியை கூடுதல்பொறுப்பாக மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கவனிப்பார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply