அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நம்மைகளை உண்டாக்கியது என்றே சொல்லவேண்டும். ஒபாமா விடைபெறும்போது இந்திய மதசார்பின்மையை, மோதி காப்பாற்ற வேண்டும். அதுதான் இரு நாட்டிற்கும் நன்மை பயக்கும் என கூறியது, போகிற பிசாசு கல்லைத் தூக்கிக் கொண்டுதான் போகும் பழமொழியை ஞாயாபகபடுத்தியது.

பாரத நாட்டில் பெரும்பான்மையாகவும், பிற நாடுகளில் சிறுபான்மையாகவும் வாழும் இந்துக்கள் எம்மதமும் சம்மதம் என்று, சகிப்புத் தன்மையோடும், பரந்த மனப்பான்மை யோடுதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாரத நாட்டின் எம்மதம் மட்டுமே சம்மதம் என வாழும் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்தான் மதப்பிரச்சனைகள் தோன்றுகின்றன. இந்துக்களால் எப்போதுமே மதக்கலவரம் தோன்றியதில்லை. சுதந்திரம் பெற்றதுமமே, மதசார்பற்ற நாட்டில் மதமாற்ற தடைச் சட்டம், இயற்கையாக போட்டிருக்க வேண்டும். போலிமதவாதிகள், சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த ஓட்டிற்காக அதை செய்ய தவறியதால், இந்துக்களின் பரந்த மனப்பான்மையை பலவீனமாக பயன்படுத்தி, லட்சக்கணக்கான இந்துக்கள் மதம் மாற்றப்பட்டார்கள். இதுவே தற்போதைய மதக்கலவரங்களுக்கெல்லாம் ஆணிவேர்.

மதம் மாறி சென்ற இடத்தில் ஏமாற்றம் அடைந்து, தன்னிலை உணர்ந்து, தாய் மதம் திரும்புவதை போலி மதவாதிகள் எதிர்கின்றனர். அவர்களுக்கு வசதியாக, மதமாற்ற தடைச் சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வந்தால் அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதன் மூலம் அவர்களது இரட்டை வேடம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

சின்ன சின்ன பிரச்சனைகள் தோன்றுவது மதத்தினால் அல்ல. சொந்த காரணங்களால் தான். இதற்கெல்லாம் மதசாயம் பூசப்படுகிறது. 500 க்கும் மேற்பட்ட சேனல்கள் இயங்குவதால், சிறிய பிரச்சனைகள் கூட பூதாகரமாகி விடுகின்றன.

ஒபாமா போன்ற வெளிநாட்டு தலைவர்களும், மீடியாக்களும் உபதேசம் செய்ய வேண்டியது இந்துக்களுக்கோ, இந்து தலைவர்களுக்கோ அல்ல. நம் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கும், அவர்களது பழமைவாத அடிப்படை வாதிகளுக்கும், போலி மதவாதிகளுக்கும் மட்டும்தான்.

ஒபாமா உண்மைக்கே துணைபோக வேண்டும்!

– மோசூர் கணேசன்,அரக்கோணம் 

Leave a Reply