டெல்லி சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பிரதமர் மோடியும், கட்சியின் அகில பாரத தலைவர் அமித்ஷாவும் மட்டுமே காரணமாக கூறி வருகிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி மொத்த இடங்களில் மூன்றை மட்டுமே பெற்று இருக்கிறார்கள்,67 இடங்களில் தோல்வி ஏன் என்பது, சுற்று விரிவாக அலச பட வேண்டிய ஒன்றாகும்.

டெல்லி தேர்தலுக்கு பின்னர், அஸ்ஸம் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக விற்கு கிடைத்த வெற்றியையும் சற்றே பார்க்க வேண்டும். மேலும் இடைதேர்தலில் நடைபெற்ற பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயலோடுகளை கவனிக்க வேண்டும். இதன் காரணமாக நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் பாடுகளை கண்ணுற்றால் மோடியின் செல்வாக்கு குறைந்ததா என்பதை விவாதிக்க வேண்டும்

டெல்லியில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய வாக்கு சதவீதத்தை பெருமளவில் இழந்து விட வில்லை. 2013 நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 38.21சதவீதம் வாக்குகளை பெற்று 31 இட ங்களை கைப்பற்றியது. 2015 நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வாக்குகள் 31.42 சதவீதம் அனால் பெற்ற வாக்குகளில் அடிப்படைளில் இடங்களை பெறவில்லை. இதற்கு மாறாக ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகளை விட 24.50 சதவீத வாக்குகளை கூடிதலாக பெற்றுள்ளது. இந்த 24.50 சதவீத வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வாக்குகள் கிடையாது. ஏன் என்றால் 2013ல் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 2470 சதவீதம், 2015ல் 9.85 சதவீதமாக குறைந்து விட்டது,

காங்கிரஸ் கட்சியின் 14.85 சதாவீத வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சென்று விட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இறுதியாக டேல்லியில் அரசு ஊழியர்கலளின் எண்ணிக்கை சுமார் 7 லட்சத்திற்கு அதிகமானவர்கள். பிப்ரவரி மாதம் 10 தேதி வாக்குகள் எண்ணபடுவதற்கு முன்னால் அதாவது 8ன் தேதி ஆங்கில தொலைக்காட்சில் நடந்த விவாதத்தில், நடைபெற்ற டெல்லி தேர்தலில் அரசு ஊழியர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வக்களிகவில்லை, ஏன் என்றால் பயோமெட்ரிக் சிஷ்டம் கொண்டு வந்ததின் காரணமாக, அரசு ஊழியர்களில் சுதந்திரம் பறிபோயிற்று என்றும், எங்களின் செயல்பாடுகளில் அதிக கட்டுப்பட்டு வி தித்ததை ஏற்றுக் கொள்ள இயலாது என கூறியதை நினைத்துப் பார்க்கும் போது அரசு ஊழியர்கள் எவரும் வாக்களிக்கவில்லை என்பது தெளிவகிறது.

அரசு ஊழியர்களை போலவே, வாக்களிக்கும் முன், டெல்லி இமால் சயித் அகமது புகாரி விடுத்த அறிக்கையை பார்க்க வேண்டும், மோடி அரசுக்கு ஆதரவாக எந்த இஸ்லாமியரும் வாக்களிக்க கூடாது என்று பகிரங்கமாகவே விடுத்ததையும் கவனிக்க வேண்டும். ஆகவே டெல்லி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி, இஸ்லாமியர்கள், அரசு ஊழியர்கள், மதசார்பற்றவதிகளாக காட்டிக் கொண்டு செயல்பட்டவர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுச் சதியின் காரணமாகவே பாரதிய ஜனதா கட்சி பல இடங்களில் வெற்றி பெற இயலவில்லை

மேலும், தேர்தல் காலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர், நடைமுறைப் படுத்த இயலாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். குறிப்பாக கூற வேண்டுமானால், தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இலவசம் என்று கூறியதை மாற்று வழியில் கூறி வாக்குகளை பெற்றனர். அதில் சில, ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு 20,000 லிட்டர் இலவச குடிநீர், ஆண்டுதோறும் 10 சதவீத குடிநீர் கட்டணம் உயர்வு கிடையாது. மின் கட்டணம் பதியாக குறைக்கபடும் என்பது போன்ற வாக்குறுதிகள் கொடுத்ததின் காரணமாகவே அதிக வாக்குகள் கிடைத்தது. இந்த வாக்குறிதிகளை எவ்வாறு செயல்படுத்துவர் என்பதற்கு முறையான திட்டங்களை அறிவிக்கவில்லை. மேலும் தேர்தல் காலத்தில் ஒரு லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை முழு நேரப் பணியாளர்களாக ஆக்குவதாக வாக்குறுதி. இம்மாதிரியான வாக்குறுதிகளை பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கவில்லை.

பெருவாரியான ஊடகங்களை கேஜரியல் ஊழல் அற்றவர் என்ற மாயையை ஏற்படுதினார்கள். இதற்கு சரியான உதாரணம்,10,ன் தேதிக்குள் பின்னர் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நாளிதழ், ஆம் ஆத்மி கட்சியை புகழும் விதமாக தினசரி கட்டுரை எழுதுகிறார்களே ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை. தனது கபீர் தொண்டு அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து எவ்வாறு நிதி வந்தது என்பதை வெளி உலகத்திற்கு தெரிவிக்க வேண்டிய கடமையை மற்றவர்கள் ஊடகவியலார்கள். தேர்தல் நிதியாக ரூ20 கோடி வந்தது எவ்வாறு என்ற கேள்வியை எழுப்பவில்லை.

பாகிஸ்தான், பங்களா தேஷ், துபாய் போன்ற நாடுகளிலிருந்து நிதி எவ்வாறு கிடைத்தது? யார் கொடுத்தார்கள்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டிய ஊடகங்கள் எழுப்பவில்லை. தேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் பங்கம் தேஷ் ஊடுருவல் இஸ்லாமியர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என கூறியது ஏன் என்ற கேள்வியை கூட எவரும் கேட்கவில்லை. பயங்கரவாத செயல்களை செய்த அப்சல்குரு, யாசின் பல்கல் போன்றவர்களை அப்பாவிகள் என முமூக்கமிட்ட, ஆம் ஆத்மி கட்சியா தேசிய ஒருமைப் பாட்டிற்கு பனி செய்யும்? என எவரும் கேள்வி கேட்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சியும் சில தவறுகளை செய்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முறையான தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு பதிலாக செயல்முறை திட்டம் என வெளியிட்டதை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கிரண் பேடியை கொண்டு வந்தது தவறு என்பதும், முந்தை தேர்தலில் வெற்றி பெற்ற பலருக்கும் இம் முறை நிற்க வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதும் தோல்விக்கான காரணங்களின் ஒன்று என சிந்திக்க வேண்டிய விஷயமாகும். நாடளுமன்ற தேர்தலின் போதே டெல்லி சட்ட மன்ற தேர்தலையும் நடத்துமாறு வலியுருத்தியிருக்கலம், அல்லது ஆட்சிக்கு வந்தவுடன் டெல்லி தேர்தலை நடத்தியிருக்கலாம். அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வருகை தந்த போது, மோடியின் உடை ரூ10 லட்சம் என்ற பிரச்சாரத்தை முறியடிக்கும் விதத்தில் பாஜக சார்பில் முழுமையான பிரச்சாரம் இல்லை.

இன்னும் கூற வேண்டுமானால், பாராளுமன்ற தேர்தலின் போது இந்த ஒருங்கிணைப்பு 2015ல் டெல்லியில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் முழுமையாக இல்லை. மாநில நிர்வாகிகளுக்கும் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்ப்பு ஆக்க பூர்வமானதாக இருக்க வில்லை.

டெல்லி தோல்வி பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட தோல்வி என கூறுவது தவறானதாகும். ஏன் என்றால், அஸ்ஸாமில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 42 டவுன் கமிட்டியில் 24ம், 74 அர்பன் கமிட்டியில் 43லிலும் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில், 30 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த இடது சாரி கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மற்றதாக பாரதிய ஜனதா கட்சி வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, இடைத்தேர்தல் முடிவுகள் வந்துள்ளதையும் கவனித்தால், மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்பது புலனாகும்.

Leave a Reply